கும்பகோணம், ஏப். 23 –
சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொழிலாளருக்கெதிரான செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளார்களின் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேர வேலை நேரமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள திமுக தலைமையிலான தொழிலாளர்கள் விரோத அரசைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கும் போது, தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, இதே மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தற்போது பா.ஜ.க அரசு கொண்டு வந்த இத்திட்டத்தை தி.மு.க நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது என அவர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் இச்சட்டத்தை கண்டித்தும் உடனடியாக அச்சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் கண்டனமுழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்னர்.
மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டம் அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலுலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அரண் சைமன் பொறுப்பாளர் சரவணன், மாணவர் அரண் கார்த்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி செந்தோடியன், அறிவு சார் கூட்டமைப்பு ஜான்சன், சனநாயகத்திற்கான தொழிலாளர் கட்சி முனியப்பன், பகுஜன் சமாஜ் கட்சி முருகன், விடுதலை சிறுத்தை கட்சி கடைக்கோடி தொண்டன் குடந்தை மூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக தலைமையிலான அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.





















