புதுடெல்லி:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 12 நாட்கள் கழித்து, இன்று இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று 2019ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டமன்றம் கூடியது. அப்போது டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்னதாக சபாநாயகர் ராம் நிவாஸ் பேசும்போது, எல்லை தாண்டி பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையினருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார். அப்போது விமானப் படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று பாராட்டினர்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பேசுகையில், “புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டினை சமர்ப்பணம் செய்கிறேன். இந்திய விமானப்படையினரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இந்த பட்ஜெட் உயிரிழந்த வீரர்களின் கனவை நனவாக்கும் வகையில், அவர்களது குழந்தைகள் சிறந்த கல்வி பெற நிச்சயம் வழி வகுக்கும். இந்தியா தாக்குதல் நடத்தி நாடே பெருமிதம் அடைந்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்” என்றார்.

உறுப்பினர்கள் எழுந்து நின்று விமானப் படை வீரர்களை பாராட்டியபோது, பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here