பொன்னேரி, சனவரி. 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத் தலைவர் பகலவன், பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர். பரிமளம்விஸ்வநாதன், ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், சுகுமார், செல்வசேகரன், ஜெகதீசன், சேர்மன் ரவி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், மாநில இலக்கிய அணி புரவலர் தஞ்சை கூத்தரசன், பொருளாளர் முனைவர் நா.சந்திரபாபு, தலைமைக் கழகப் பேச்சாளர் க.எழிலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் சிறப்புகளையும் எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களான காலை உணவு திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து, கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகை, குடும்பப் பெண்களின் உரிமைத்தொகை போன்ற நல்திட்டங்களை குறித்து பேசினர், இதில் மாவட்டத் துணைச் செயலாளர் மு.க கதிரவன், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன், பொன்னேரி மா.தீபன், உள்ளிட்ட திரளான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் வெகுச்சிறப்பாக செய்திருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here