திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலையில் லட்சுமி பல் மருத்துவமனை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பல் சுத்தம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை துராபலி தெருவில் லட்சுமி பல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையின் திறப்பு விழா காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை சிவராஜ் வரவேற்றார். மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் குணசேகரன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
விழாவில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் கதர்சீனு, இளையபெருமாள், சாந்தா, டாக்டர் பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லட்சுமி நன்றி கூறினார். இந்த மருத்துவமனையில் பல் மருத்துவம் சம்பந்தமான அனைத்து விதமான நவீன முறை சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. அதற்கான நவீன சாதனங்களும் அமையப் பெற்றுள்ளன. மேலும் லட்சுமி பல் மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.முகிலன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி படிப்பு நிறைவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மருத்துவமனை எல்லா வார நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9-30 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும். பற்களை சீரமைத்தல், வேர் சிகிச்சை, பல் சொத்தை அடைத்தல், பல் அகற்றுதல், பல் சுத்தம் செய்தல், செயற்கை பற்கள் கட்டுதல், பற்களை வெண்மைப்படுத்துதல், குழந்தை பல் பாரமரிப்பு, பல் கூச்சம், ஈறுகளில் இரத்தக்கசிவு, ஈறு சிதைவு நோய், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள் ஆகிய பல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திறப்பு விழா சலுகையாக வருகிற 31ந் தேதி வரை பல் சுத்தம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.