கும்பகோணம், ஜன. 27 –

     கும்பகோணம் அருகே அழகாபுத்தூரில் அமைந்தள்ள சௌந்தரவள்ளி சமேத சொர்ணபுரீஸ்வர் திருக்கோயிலில் லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

      கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகாப்புத்தூரில் பிரசித்தி பெற்ற பழமையான சிவதலமான சௌந்தரநாயகி சமேத சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது இத்தலத்தை 63 நாயகன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனார் வழிபட்டு பேறு பெற்றுள்ளார் புராணங்களில் அரசிற்கரை புத்தூர் என அழைக்கப்பெற்ற இத்தலம் அழகாப்புத்தூர் என பெயர் மருவியது.

     புகழ்துணை நாயனார் ஏழ்மை நிலையிலும், பசியோடு தனக்கு உணவு இல்லாமல் இருந்த நிலையிலும் அவர் நித்திய பூஜை செய்வதனை நிறுத்தியதில்லை, அவரது பக்தியை மெச்சிய இறைவன் அவருக்கு தினந்தோறும் கருவறை படிக்கட்டில் நித்தம் ஒரு பொற்காசினை வைத்து அவரை போற்றியுள்ளார்.

     இத்தகைய பெருமைமிகு தலத்தில் முருகப்பெருமான் வள்ளி  தேவசேனாவுடன் வேறு எங்கும் காண முடியாத வகையில் இடதுபுற மயிலை வாகனமாக கொண்டதுடன் சங்கு சக்கரத்துடனும் ஆறு முகங்களுடன் பனிரெண்டு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார் பிரகாரத்தில் அமைந்துள்ள இவர் சன்னதி பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்,

    இவரை கார்த்திக்கை நட்சத்திரம் மற்றும் சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம்

     இத்தகைய பெருமைமிகு தலத்தில், லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேக திருபணிகள் நிறைவு பெற்று 26ம் தேதி விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி, கும்பஸ்தாபனத்துடன் முதல் கால யாக பூஜை தொடங்கி இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தியும், மகா தீபாராதனையும் நடைபெற்று, நந்தி வாத்தியங்கள், நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here