கும்பகோணத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கர்ணக்கொள்ளை தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கும்பகோணம், செப். 6-
கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில் வழிபாடு செய்யவும் நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10ஆம் தேதி வரயிருக்கிறது. அந்நாளை எதிர்பார்த்து இந்து அமைப்புகள் பொதுமக்கள் காத்திருக்கிறோம். என இந்துமக்கள் கட்சி அனுமான் சேனா நிர்வாகி நெரிவித்தார். தமிழக அரசு அவரவர் இல்லங்களில் வைத்து வழிபடலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எங்களுடைய இல்லங்களில் வைத்து வழிபடுவதற்கு தமிழக அரசு ஏன் அனுமதி அளிக்க வேண்டும். என்ற கேள்வியை நாங்கள் தொடர்ந்து முன்னெழுப்புகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் கர்ண கொல்லை வடக்குத்தெருவில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் நகர தலைவர் பிரபாகரன் இல்லத்தில் இன்றைய தினம் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 11ம் தேதி இந்த விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசின் உத்தரவுப்படி நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதே போன்று நிர்வாகிகளின் இல்லங்களில் 24 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பொது இடங்களில் வினாயகர் சிலைகளை வைத்து வழிபட அண்டை மாநிலங்கள் கர்நாடகாவில் புதுச்சேரியில் தெலுங்கானாவில் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடத்தில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்தச் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று ஆன்மீக அன்பர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
மாநில செயலாளர் பாலா தலைமையில் இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் பிரபாகரன் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஆகியோர் கொரோனா வைரஸை விரட்டும் வண்ணம் சங்கல்பம் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.