கும்பகோணம், ஆக. 10 –

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் தெற்கு சோழிய தெருவை சேர்ந்த கைப்பிள்ளை மகன் கணேசன் விவசாய நிலத்திற்கு மருந்து தெளிப்பதற்காக  சென்றார். அப்போது, அங்கு வயல் வரப்பில் மின்சார கம்பி அறுந்து விழுந்திருப்பதைப் பார்க்காமல் அதனை மிதித்துள்ளார்.

அப்போது கணேசனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் இவ்விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து, கணேசனின் உடலை பிரேதபரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here