கும்பகோணம், ஜூன். 16 –

கும்பகோணம் அருகே தென்னூர், வட்டார போக்குவரத்து அலுவலக வாயில் முன்பு, இன்று நண்பகல் சாலையில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிக்கியவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

தஞ்சாவூர் கரந்தைப் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் இன்று நண்பகல் தனது அண்ணன் குணசேகரனுடன் உரிமம் புதுப்பித்தலுக்காக கும்பகோணம் அருகே தென்னூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அலுவலக வாயில் எதிரே, சாலையை கடக்கும் போது, பட்டீஸ்வரம் பகுதியில் இருந்து கொற்கை நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் ( KTM பைக் ) பலமாக மோதியதில், ராஜி, சாலையில் தூக்கி எறியப்பட்டு, சாலையில் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயமுற்றும், கால் எலும்புகள் முறிந்த நிலையில், சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டார், இது குறித்து தகவல் அறிந்த பட்டீஸ்வரம் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ராஜி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழப்பு ஏற்பட காரணமான விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய இளைஞரை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தென்னூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here