கும்பகோணம், மே. 22 –

கும்பகோணம் அருகேவுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற மீண் வியபாரி ஒருவர் வெகு நேரமாகியும் ஆற்றுக்குள் மூழ்கியவர் வெளி வராததால் இரவு முழுவதும் தீயணைப்பு காவலர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் காலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மீன் வியாபாரி இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர்.

திருப்பனந்தாள் அடுத்துள்ள அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை குளிக்கச் சென்ற தனுஷ் என்ற மீன் வியாபாரி  நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் இரவு முழுவதும் நீண்ட நேரம் தேடிய நிலையில் காலையில் இறந்த உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மீட்கப்பட்ட தனுஷின் உடலை உடற்கூறு ஆய்விற்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here