கும்பகோணம், டிச. 9 –

கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழைமையான கோயில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிளை வைத்து நவீன தொழில் நுட்பத்தில் இடமாற்றம். ஆச்சரியத்துடன் வந்து பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் மூழ்கினர்.

படம்  : 150 ஆண்டுகால பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் 5 அடிக்கும் மேற்பட்ட தூரத்திற்கு நகர்த்தப் பட்டு ஏழடி உயரத்தில் அமர்த்தப்பட இருக்கும் புதிய பீடமாகும்

கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழமையான நாகத்தி வீரகாளியம்மன்  கோயில் உள்ளது இந்த கோயில் கருவறை மண்டபம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு  இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் நலன் கருதி. 150ஆண்டு பழைமையான கோயில் கருவறை மண்டபத்தை இடிக்க மனமில்லாத கிராம மக்கள், மாற்று வழியில் கோயில் கருவறை மண்டபத்தை அகற்ற முடிவு செய்தனர்.

இதுகுறித்து கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனையை கேட்ட கிராம மக்கள் கட்டிடத்தை சேதம் எதுமின்றி அப்படியே நவீன தொழில் நுட்பத்தில் ஜாக்கிகள்  உதவியுடன் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்க முடியும் என கட்டிட வல்லுனர்கள்  கிராம மக்களுக்கு  தெரிவித்தனர். இதனையடுத்து  நவீன தொழில் நுட்பத்தில் கட்டிடத்தை நகர்த்த முடிவு செய்தனர். அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள்  வரவழைக்கப்பட்டு கோயில் கருவறை மண்டபம் நகர்த்தும்  பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுனர்  கூறியதாவது,

அம்மாபேட்டை  கிராம மக்கள் தங்களது கிராமத்திலுள்ள கோவில் கருவறை மண்டபத்தை 5 அடி தூரத்தில் இடமாற்றம் செய்தும், 7 அடி உயரம் உயர்த்தியும் தரும்படி கேட்டுக் கொண்டனர். இதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து 11 தொழில்நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கோயில் கருவறை மண்டபத்தை சுற்றி பள்ளங்கள் தோண்டப்பட்டு  100க்கும் மேற்பட்ட ஜாக்கிகள்

பொருத்தப்பட்டு  கருவறை மண்டபம் நகர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் 35 நாட்களில் நகர்த்தி முடித்து வைக்கப்படும் என்று தெரிவித்துனர்..

கோயில் கருவறை மண்டபம் நகர்த்தப்பட்டு வருகிறது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து கோயில் கருவறை உடைப்படாமல் வேறு இடத்தில் நகர்த்தி வைக்கும் பணியைப் பார்க்கும் போது தாங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பதை உணர்வதாக கூறுகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here