கும்பகோணம், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் அருகே செருகுடி கிராமத்தில் செருகுடி அய்யனார் விநாயகர் அய்யனார் காளியம்மன் பிடாரி அம்மன் ஆகிய நான்கு ஆலயங்கள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, நாச்சியார் கோவில் அடுத்த செருகுடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயமான செருகுடி அய்யனார் விநாயகர், காளியம்மன், பிடாரி அம்மன், ஆகிய ஆலயங்களில் பல ஆண்டுகளுக்கு பிறகு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 20 ஆம் தேதி விநாயகர் பூஜை உடன் வேள்விகள் தொடங்கப்பட்டு தமிழ் முறைப்படி கேள்விகள் தொடர்ந்து நடைபெற்றது.
இன்று நான்காம் கால கேள்வி பூஜைகள் முடிந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க கடம்பரப்பாடு செய்யப்பட்டு தமிழ் வேத மந்திரங்கள் முழங்க விநாயகர் காளியம்மன் பிடாரியம்மன் தொடர்ந்து செருகுடி அய்யனார் ஆலயம் என நான்கு ஆலயங்களுக்கும் கடங்கலில் இருந்து புனித நீரூற்றி திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விநாயகர் கோயில் தெரு வாசிகள், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சிறப்பாக செய்திருந்தனர்.