பொன்னேரி, ஏப். 11 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் “மாபெரும் தமிழ் கனவு” என்ற கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைக் குறித்த இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் மற்றும் வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இதில், சிறப்பு விருந்தினர்களாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்வில், மண் வளம் மற்றும் பெண்கள் நிலை குறித்து கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் “நிலையான வாழ்க்கை புவிக்காக” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், சுற்றுச்சூழல் குறித்து வெகு விரிவாக விளக்கிவுரை நிகழ்த்தினார். மேலும் அப்போது அவர் சரியான முறையில் புவியினை பாதுகாப்பதன் மூலமாக நமக்கு விளையும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், “காலத்தோறும் பெண்கள்” என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு அழைப்பாளர்களுடன் கலந்துரையாடிய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், ‘கேள்வியின் நாயகன்’ எனும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.