பட்டுக்கோட்டை, மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்க்காக செய்தியாளர் சாரு

பட்டுக்கோட்டை அருகே கடந்த புதன் கிழமையன்று நடைப்பெற்ற காதணி விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  வி.கே. சசிகலா 2026 தேர்தலில் நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் என பத்திரிக்கை யாளர்களிடம் அப்போது அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சீதாம்பாள்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய  வி.கே. சசிகலா பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது :என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான் எனவும், மேலும் .நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும் என்ற அவர். தற்போது மூன்று அணியாக இருக்கின்ற அதிமுக  ஒன்றாக இணைய வாய்ப்பு வந்துள்ளதாக எனது அனுமானத்தில் கருதுகிறேன்.என்றார்.

தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. எனவும்மேலும் தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது தமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவும், மேலும் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது. என கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து ஆவின் பாலில் புழு ,பூச்சி உள்ளதாகவும், அரசு அதை தடுக்க தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக அரசின் தற்போதைய கவனம் எப்படியாவது பொய் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பதையாகும். ஜெயலலிதா ஆட்சியில் இது போன்ற எந்த தவறும் நடந்தது இல்லையெனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

.மேலும் 2026 தேர்தல் என்பது எங்களுக்கும் திமுகவிற்கும் நேரடி போட்டியாக இருக்கும் எனவும் அத்தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் என்ற அவர் அப்போது திமுக என்னவாகும் என்பதையும் தாம் கணித்து வைத்துள்ளதாக அப்போது வி.கே.ச சிகலா தெரிவித்தார்.

மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் எனவும், அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பங்காளி சண்டையால்தான், அவர் அதிமுகவை சேர்ந்தவர்தான். வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here