கலசபாக்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அருணை மருத்துவ குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமுக்கு பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகிக்க, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையேற்று முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவ வசதிகளும் தடுப்பூசி முகாம்களிலும் முதன்மை இடம் பிடிப்பதற்கு அயராமல் பாடுபடுவேன் அனைத்து துறைகளிலும் முதன்மை மாவட்டமாக இம்மாவட்டத்தை உருவாக்குவேன் என்றார். இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பட்டம்மாள் முனுசாமி, உள்பட அருணை மருத்துவ கல்லூரி குழும மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.