காஞ்சிபுரம், ஏப். 23 –
காஞ்சிபுரம் அருகே ஆற்றில் இருந்து 2 அடி உயரமுள்ள சாமி சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு செய்யாறு வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சாமி சிலை இருந்ததை கண்டெடுத்துள்ளனர்.
உடனே இதுக்குறித்து சாலவாக்கம் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்க்கு வந்த சாலவாக்கம் போலீசார் இரண்டு அடி உயரம் கொண்ட குதிரை வாகனத்துடன் கூடிய காட்சி அளிக்கும் அச்சாமி சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தால் சாமி சிலை ஆற்றில் அடித்து வரப்பட்டதா ? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் ஆற்றில் விசி சென்றுள்ளனரா ? என பல கோணங்களில் வருவாய்துறையினர் சாமி சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















