மீஞ்சூர், மே. 15 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மீஞ்சூரில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் திருகோயிலில் வைகாசி மாதம் பத்து நாள் திருவிழா எடுப்பது வழக்கம். இத் திருவிழாவில் மீஞ்சூரில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற விழாவாகவும் நடைபெறும்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் சூரியபிரபை. சந்திரப்பிரபை . சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் செய்வது வழக்கம் அதன் தொடர்ச்சியாக இன்று கருட வாகனத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு கருடசேவை வாகனத்தில் அருள்பாலித்தார்.

இவ்விழாவில் திரளான பக்தகோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் திருவிழாவின் தொடர்ச்சியாக வருகின்ற 19ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது என்பதும் இத்திருவிழாவின் மிக சிறப்பான நிகழ்ச்சியாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here