ராமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொம்மி அம்மன் வெள்ளை யம்மன் சமேத மதுரை வீரன் சுவாமி திருக் கோயில் மகா கும்பா பிஷேக விழா வெகு விமர் சையாக நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் நயின்கோயில் ரோட்டில் அமைந்துள்ள காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொம்மி அம்மன் வெள்ளையம்மன் சமேத மதுரைவீரன் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது.  வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் துவங்கி முதல்கால யாகசாலை பூஜை ஆரம்பித்தது. தொடர்ந்து ஒன்றாம் கால பூர்ணாகதி தீபாராதனை நடந்தது. பின் யந்தர ஸ்தபானம், மருந்து சாத்துதல் நடந்தது. கும்பாபிஷேக தினத்தன்று விக்னேஸ்வர பூஜையும் பூதசுத்தி தனபூஜையும் சோம கும்ப பூஜையும், பாலிகா பூஜை, கோ பூஜை 2ம் கால மஹாபூர்ணாஹதி மற்றும் தீபாராதனைகள் நடந்தன.

கோயில் முக்கியஸ்தர்கள் புனித நீர் கும்பத்தை சுமந்து கொண்டு கடம்புறப்பாடு நடந்தது. கோயிலை வலம் வந்தபின் வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க வானத்தில் கருட பகவான் வட்டமிட ராஜாராம் பட்டர் தலைமையில் பட்டர்கள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷகே நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர்.

கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் கருடபகவானை தரிசித்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடியாக தரிசித்தும் கும்பாபிஷேக புனித நீர் ஊற்றப் பட்டதை தலையில் தெளித்து தரிசனம் செய்தனர். பின் மதுரைவீரன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி குல தெய்வ வழி பாட்டாளர்கள் மற்றும் காருகுடி கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here