கும்பகோணம், ஏப். 08 –
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பு காலம் முடிந்து இப்போதுதான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள்.
ஆனால் தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். சொந்தமாக தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி பூங்கா எதிரே மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் புரட்சி கவிதாசன் மாநிலச் செயலாளர் தங்க வரதராஜன் நாகை மாவட்ட தலைவர் வெங்கடேசன் மாவட்டச் செயலாளர்கள் கருப்பூர் மணி பொன்ராஜ் தேவர் வர்த்தகப் பிரிவு மாநில துணைச்செயலாளர் கராத்தே ராஜா நகர தலைவர் கல்கண்டு ரங்கராஜன் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் உமாதேவி மகளிர் அணி மாவட்ட தலைவர் சுனிதா உள்ளிட்ட நகர ஒன்றிய மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.




















