காஞ்சிபுரம், ஆக. 22 –

காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

இத்திருக்கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர் வைபவ திருவிழா கடந்த 2019 ஆண்டு நடந்து முடிந்தது. வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்தி வரதர் 2019 ஆம் ஆண்டில் 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டுள்ளார். மீண்டும் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அவர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இந்த நிலையில் அத்தி வரதர் உள்ள அனந்த சரஸ் குளத்தில் நூற்றுக்கணக்கில் மீன்கள் செத்து மீதக்கின்றனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெழி நாட்டு சுற்றுலா பயணிகளும் காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தனர். அனந்த சரஸ் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் குளம் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்திற்க்கு செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து செத்து மிதக்கும் மீன்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here