காஞ்சிபுரம், ஜூலை. 07 –

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி 2020 – 2022 ஆண்டு மேம்பாட்டு நிதியின் கீழ் 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

மேலும், இந்நிகழ்வைத் தொடர்ந்து சிறுகாவேரிபாக்கத்தில் 18.79 லட்சத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடத்திக்கு அடிக்கல் நாட்டினார் கீழ்அம்பி பகுதியில் நியாயவிலை கடை திறந்து வைத்தார். மேலும் 15.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை திறந்து, 79.54 லட்சம் மதிப்பில் கிளார் ஊராட்சியில் கிளார் – பெரும்பாக்கம் இடையே அமையவுள்ள தார் சாலை பணிகளையும் எம்.எல்.ஏ துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமர், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியாசுகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here