திருவாரூர், மார்ச். 30 –

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியில் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, சிறப்புரை நிகழ்த்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும் இவ்விழாவில் ஜூனியர் ரெட் கிராஸின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை ஜே.ஆர்.சி மாவட்ட பொருளாளரும் பள்ளியின் ஆலோசகருமான இர. சரவணக்குமார் வாசித்தார்.

தொடர்ந்து, பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் க. முருகதாஸ்  உடற்கல்வி ஆசிரியர் கு. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் அப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் சீ. விஜய், இசை ஆசிரியை நா.மீனாட்சி, ஆசிரியர் வி. சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து, விழாவில் ஜூனியர் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்களும், முகக் கவசங்களும் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் ப. விவேகானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். பட்டதாரி ஆசிரியர் அ. கு. ஆனந்த்  நன்றியுரை நிகழ்த்தினார்.

மேலும் இவ்விழாவிற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் மிகச்சிறப்பாக பள்ளியின் அலுவலக ஊழியர்கள் நா. பாலாஜி மற்றும் நேரு செய்திருந்தார்கள்.

தொடர்ந்து இவ்விழாவில் ஜூனியர் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகளினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here