திருவாரூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. தொடர்ந்து வெப்ப அலை வீசிய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக் கொட்டி தீர்த்தது.
திடீரென காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான விளமல், தண்டலை, அம்மையப்பன், கண்கொடுத்தவனிதம், கமலாபுரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம், குடவாசல் திருத்துறைப்பூண்டி, மாவூர், கோமல், கச்சனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை அரை மணிநேரம் விடாது கொட்டி தீர்த்தது.
இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து திருவாரூர் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.