திருவையாறு, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது.
மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து உடலில் பெருத்த நீர்சக்தி இழப்பை ஏற்படுத்தி சோர்வடைய செய்து வந்தது.
இந்நிலையில் வாரா வரப்பிரசாதமாக இன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுனுடான கனமழை பெய்து அப்பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி பெருத்த அடைந்துள்ளனர்.



















