மயிலாடுதுறை, ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக கூறிவருவது தவறு. ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா நமக்கு வருகிறது. உத்தர பிரதேசத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.1.60 பைசா செல்கிறது. 1971-ஆம் ஆண்டு நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாடு தீவிர கவனம் பெற்றது.

இதனால் காங்கிரஸ் ஆட்சியில் 1971-ஆம் ஆண்டு இருந்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கான நிதி பிரித்து வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக அரசு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மாநிலங்களுக்கான நிதியை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றியதால் தமிழகத்தில் இருந்த 40 மக்களவைத் தொகுதி 39 ஆக குறைந்துவிட்டது. மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற அரசின் திட்டத்தை செயல்படுத்தியது ஒரு தவறா? மக்கள் தொகை குறைந்ததினால் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை குறைப்பது சரியானதா? மத்திய அரசு தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.

மும்பையில் இருந்து உத்தரபிரதேசம் வழியாக டெல்லி செல்லும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில்வே காரிடார் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டுள்ளது என்றாவாறு கே.எஸ்.அழகிரி பரப்புரை நிகழ்த்தினார்.

அந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here