தமிழக சட்டபேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு
ராமநாதபுரம், ஜூலை 12-
பொதுமக்கள் தங்கள் வீட்டு உபகரணங்களை கைப்பேசியில் உள்ள செயலி வாயிலாக எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் ஒரு செயலி மூலமாக கட்டுப்படுத்த முடியும். முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் உத்தேச மதிப்பீடு ரூ.0.50 கோடி ஆகும், தமிழக சட்டபேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மானிய கோரிக்கை விவாத்தின் போது தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
தமிழக சட்டபேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இதய தெய்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நினை விடத்திற்கு சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தி விட்டு சட்டபேரவைக்கு வந்தார். பின் அவர் சட்ட பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியதாவது:
அரசு இணையதளங்களை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் புதிய செயலி தொடங்கப்படும் தகவல் தொழில்நுட்பவியல் வளர்ச்சிக்காக இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1 கோடியை ரூ.5 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருக்கும் மேகக்கணினி அமைப்பு இனி முதல்கொண்டு தனிப்பட்ட அடையாளத்துடன் தமிழ் மேகம் என்ற பெயரில் அறியப்படும். இந்த தனிப்பட்ட அடையாளத்திற்கான காப்புரிமை சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் பெறப்படும். இத் திட்டத்திற்கு ரூ.0.05 கோடி செலவினம் ஏற்படும் என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.
தற்போது எல்காட் நிறுவனத்தால் அமைக்கப் பட்டுள்ள மேகக் கணினி உட் கட்டமைப்பானது பயன் பாட்டு மென் பொருட்களை மூன்று அல்லது நான்கு மெய்நிகர் இயந்திரங் களில் பதி வேற்றம் செய்யக் கூடிய அளவில் அமைந் துள்ளது. இந்த மேகக் கணினி உட் கட்டமைப்பு தனது கொள்ளளவில் 70 சதவீதம் வரை பயன் படுத்தப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளின் தற் போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக் கேற்பவும், பேரிடர் கால தரவு மீட்பு வசதிக்காகவும் 100 சதவீத பயன் பாட்டினை உறுதி செய்யும் வகையிலும் இக் கட்டமைப்பினை விரிவாக்கம் செய்ய நடவடிக் கைகள் மேற் கொள்ளப் படும். இத் திட்டம் ரூ.10 கோடி செலவில் நடை முறைப் படுத்தப் படும்.
பொருட்களுக் கான இணைய வசதி என்பது அன்றாடம் உப யோகிக்கும் கணித்தல் கருவிகளின் தகவல்கள் பரி மாற்றத்திற்கும் தொலை தூரத் திலிருந்து கண் காணிப்பதற்கும் உரிய இணைப் புகளை இணையம் வழியாக ஏற் படுத்து வதாகும். எல்காட் நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தின் பயன் பாட்டினை உபயோகித்து சிறந்த தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில் முனை வோர்களின் ஆரம்ப கட்ட நிறுவனங் களின் துணைக் கொண்டு நவீன தொழில் நுட்ப இல்லங் களை உருவாக்க உள்ளது.
வீடுகளுக்கு அவரவர் தேவைகளுக் கேற்ப வெவ்வேறு தொகுப்புகளில் கட்டணங்கள் நிர்ணயிக்கப் படும். எல்காட் எனப்படும் பொருட்களின் இணையம் பொது மக்கள் தங்கள் வீட்டு உப கரணங்களை கைப் பேசியில் உள்ள செயலி வாயிலாக எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் ஒரு செயலி மூலமாக கட்டுப்படுத்த முடியும். முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் உத்தேச மதிப்பீடு ரூ.0.50 கோடி ஆகும்.
பாதுகாப்பு விதிகளின்படி இணையப் பதிவேற்றம் செய்யப்பட்ட வலைத்தளங்கள், இணையப் பயன்பாடுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட சாக்கெட் அடுக்கு, போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பினை கொண்டிருக்க வேண்டும். இதில் பயனர்களின் பொருண்மைகள் தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக சர்வர் கணினியில் குறியீடு செய்யப்பட்டு இணைய உலாவியில் காண்பிக்கப் படுகின்றன.
இதன் மூலம் இணையவழி தரவு பரிமாற்றத்தின்போது தகவலின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்., டி.எஸ்.எல். சான்றிதழ்கள் கட்டணத்தின் பேரில் பல்வேறு சான்றளிப்பு முகமைகளால் அளிக்கப்படுகினற்ன. LetsEncrypt என்பது எஸ்.எஸ்.எல்., டி.எஸ்.எல். சான்றிதழ்களை இலவசமாக அளிக்கும் ஒரு சான்றளிப்பு முகமையாகும். இவ்வசதி அனைத்து அரசுத் துறைகள் மற்றும் முகமைகளுக்கு தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் ஏற்படுத்தி தரப்படும்.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகள், நிறுவனங்கள், முகமைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறைகளில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பணியாளர்களுக்கும் தேசிய தகவலியல் உதவியுடன் தனிநபர் மற்றும் அலுவலர் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகள் tn.gov.in என்ற தளப்பெயருடன் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் வழங்கப்படும்.
நமது நாடு மின்னணு பரிவர்த்தனை முறையை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வருகிறது. எனவே அரசு துறைகள் மற்றும் அதன் நிறுவனங்கள் அதை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக தமிழ்நாடு மின்னாளுமை முகமை ஒரு மின்னணு பணம் செலுத்தும் தளத்தை நிறுவும். ஒவ்வொரு அரசுத் துறையும், அரசு நிறுவனமும் மேற்கண்ட பணப் பரிமாற்ற பயன்பாட்டு மென்பொருளை அவர்களுக் கென பிரத் யேகமாக உருவாக்கும் போது மேற் கண்ட தள மானது ஒரு மூல மென் பொருளாய் பயன் படும்.
அத னால் பணம் செலுத்தும் முகப்பு வழியை உருவாக்க அவர்கள் தனியாக ஏல முறைகளை பின்பற்றத் தேவை யில்லை. மேலும் RTGS, NEFT netbanking, பணப் பைகள், Upi, மொபைல் வங்கி போன்ற அனைத்து கட்டண இடை முகங்கள் இந்த தளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப் படும். இந்த ஒற்றை மின்னணு கட்டணம் செலுத்தும் தளம் ரூ.1.60 கோடி மதிப்பில் நிறுவப் பட உள்ளது.
அனைத்து அரசுத் துறைகள், நிறுவனங்கள் பயன் படுத்தும் விதத்தில் குறைந்த செலவில் குறுந்தகவல் முகப்புவழி ஒன்றை தமிழ்நாடு மின்னாளுமை முகமை அமைத்திடும். இந்த குறுந்தகவல் முகப்பு வழியானது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யும் விதத்தில் வடிவமைக்கப்படும். மென்பொருள் உருவாக்குனர்கள் தங்களது மென்பொருளில் எளிதில் இந்த குறுந்தகவல் வசதியை ஒருங்கிணைத்திட தேவையான மென்பொருள் ஒருங்கிணைப்புடன் வழங்கப்படும். இந்த சேவை ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் மணிகண்டன் அறிவித்தார்.