கும்பகோணம், பிப். 4

நாச்சியார்கோயிலில் கூலி உயர்வு கோரி, குத்துவிளக்கு பட்டறைகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் நாள்தோறும் பலகோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்மடும் சூழல் உருவாகி வருகிறது. மேலும், கடந்த இரு ஆண்டுகளில் மூலப்பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால், தங்களுக்கு 80 சதவீதம் கூலி உயர்வு கோரியிருந்த நிலையில், 7 சதவீதம் மட்டும் விற்பனையாளர்கள் தர முன்வந்ததால் குத்துவிளக்கு பட்டறை உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிவுள்ளனர்.

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் குத்துவிளக்கு உற்பத்திக்கு உலக அளவில் பிரசித்தி பெற்ற ஊராகும், இங்கு தயார் செய்யப்படும் விளக்குகளுக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது நாச்சியார்கோயிலில் மட்டுமல்லாது இதன் அருகேயுள்ள சமத்தனார்குடி, திருநரையூர் ஆகிய இடங்களிலும் 300க்கும் மேற்பட்ட சிறிதும், பெரிதும் ஆன குத்துவிளக்குகள் தயார் செய்யும் பட்டறைகள் உள்ளன இவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 ஆயிரம் குடும்பங்களில் சுமார் 5 ஆயிரம் தனி நபர்கள் என வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் இங்கு தயார் செய்யப்படும் குத்துவிளக்குகள் அரை அடி முதல் 7 அடி உயரம் வரை தயார் செய்து தமிழகம் மட்டுமின்றி பலவெளி மாநிலங்களுக்கும், பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது

இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குத்துவிளக்கு விற்பனையகங்கள் உள்ளன. இவற்றில் இருந்து பித்தளை வாங்கி அவற்றை கூலிக்கு, விளக்காக தயார் செய்து அவர்களுக்கே திரும்ப வழங்குவர் இவர்களுக்காண கூலி இரு ஆண்டுகளுக்கு ஓர்முறை பட்டறை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் முன்னிலையில் கூடி ஏகமனதாக நிர்ணயம் செய்யப்படும் கடந்த ஆண்டே கூலி உயர்வுக்காண பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்க வேண்டும் கொரோனா பேரிடர் காலத்தையொட்டி கூலி உயர்வு அளித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், பித்தளை குத்துவிளக்குகள் தயார் செய்வதற்காண மூலப்பொருட்களின் விலை நூறு சதவீதம் உயர்ந்துள்ள நிலையிலும், பட்டறை தொழிலாளர்களின் நாள் சம்பளம் அதிகரித்துவிட்ட நிலையிலும், பட்டறைகளை தொடர்ந்து பழைய கூலியிலேயே இயக்க முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக, விராட்டி ஒன்றின் விலை ரூபாய் 6 ஆக இருந்தது தற்போது ரூபாய் 15 ஆக உயர்ந்துள்ளது, ஈயம் 50 கிராம் ரூபாய் 60 ஆக இருந்தது தற்போது ரூபாய் 110 ஆக உயர்ந்துள்ளது, நிலக்கரி கிலோ ரூபாய் 15 ஆக இருந்தது ரூபாய் 30 ஆகிவிட்டது, பர்னஸ் ஆயில் லிட்டர் ரூபாய் 20 ஆக இருந்தது தற்போது 40 ஆக உயர்ந்து விட்டது பட்டறை ஆட்கள் சம்பளம் நாள் ஒன்றுக்கு சாராசரியாக ரூபாய் 750 ஆகவும் உயர்ந்து விட்டதால், 80 சதவீத கூலி உயர்வு வேண்டும் குத்துவிளக்கு பட்டறை உற்பத்தியாளர்கள், குத்துவிளக்கு விற்பனையாளர்களிடம் கோரிக்கை முன்வைத்தனர் ஆனால் அவர்கள் 7 சதவீதம் வரை மட்டும் தர முன்வந்ததால், நேற்று முதல் குத்துவிளக்கு பட்டறைகள் காலவரையின்றி மூடி தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு இழந்துள்ளனர், பல கோடி ரூபாய் அளவிலான உற்பத்தியும் பாதிக்கப் பட்டுள்ளதால் இப்பிரச்சனை தொடர்பாக, விரைந்து தீர்வு காண உதவ அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குத்துவிளக்கு பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here