திருவள்ளூர், பிப். 4 –
திருவள்ளூர் பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருமைநாயகம் என்பவரின் மகன் செல்லையன் வயது 65 இவர் திருவள்ளூர் குப்பம்மாள் சத்திரத்தில் உள்ள தாபா ஹோட்டலில் செக்யூரிட்டியாக வேலைப் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப் 2 ஆம் தேதி இரவு சுமார் 8.15 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக திருத்தணி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பாண்டூர் டி.இ.எல்.சி பள்ளியின் அருகை நடந்துச் சென்றுக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்னால் வந்த அசோக் லேலாண்ட் டோஸ்டர் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நடந்து சென்றுக் கொண்டிருந்த காவலாளி செல்லையன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்துவுள்ளார். அவரை அருகேயிருந்த ஓபேத் என்பவர் மற்றவர்களின் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காவலாளி செல்லையனின் மகன் ஆண்ட்ரோஸ் வயது 49 என்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுள்ள தந்தை செல்லையனின் உடல் நிலைக் குறித்து அங்கு பணிபுரியும் மருத்துவரிடம் விசாரித்துள்ளார். அப்போது மருத்துவர் காவலாளி செல்லையன் இறந்து விட்டதாக தகவல் கூறியதின் அடிப்படையில், பலியான செல்லையனின் மகன் ஆண்ட்ரோஸ் திருவள்ளூர் காவல் நிலையத்தில் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தந்தையின் மரணத்திற்கு காரணமான அசோக்லேலாண்ட் டோஸ்டர் சரக்கு வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் தனது தந்தையின் உடலை உடல் கூறு ஆய்வு செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் புகார் மனு அளித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் இவ்விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















