காஞ்சிபுரம், ஜன. 28 –

காஞ்சிபுரம் அருகே பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிகரை பகுதியில் அனைத்து எ.சான்ட்டு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தீன் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுபாப்பு வார விழாவில் காஞ்சிபுரம் கோட்டாச்சியர் ராஜலட்சுமி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் பங்கேற்றனர்.

இந்த 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழாவில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுயிருந்தது. அதில் ஏராளமானோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழாவில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் லாரிகளில் அதிக பாரம் ஏற்றமாட்டோம், விபத்துகளை தவிர்ப்போம் உயிர்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

மேலும், இந்த விழாவில் பங்கேற்று பேசிய காஞ்சிபுரம் கோட்டாச்சியர் ராஜலட்சுமி, தமிழகத்தில் விபத்தில்லா மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்ற மாவட்டத்திற்க்கு முன் உதாரனமாக இருக்க வேண்டும் என பேசினார் மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர் ஏற்படுத்தி ஹெல்மெட் வழங்கப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here