நன்னிலம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோக நியாய விலை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா.காமராஜ் அப்புதிய கடையினை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு பொது விநியோகத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி சீனி மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கி விற்பனையை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் இராம குணசேகரன் ஒன்றிய பெரும் துணைத் தலைவர் CPG அன்பு, S சம்பத் ஒன்றிய குழு உறுப்பினர் பேரூராட்சி உறுப்பினர் S சரவணன் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுவாதி கோபால், ஊராட்சி மன்ற தலைவர்கள் M. சக்திவேல், கார்த்தி, சண்முகம், விசலூர் கார்த்தி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.