கும்பகோணம், பிப்.29 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு விழா மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தலைமையில் நடைபெற்றது.

அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி தொடக்கப்பள்ளி புதியக் கட்டிடத்தை அப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அந் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் கோவி. அய்யாராசு, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, மாநகர தலைவர் ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். எனவும், இதற்கு முன்பாக பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி ஊழல் ஆட்சி என சொன்னார்கள் தற்போது அவர்கள் நல்லாட்சி புரிந்ததாக கூறுகிறார்கள்.

நோட்டாவை விட கொஞ்சம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு யுத்தியை கையாண்டு வருகிறார். என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி போய் பேசி வருகிறார். தமிழகத்தில் பிஜேபி வெற்றி பெற முடியாது என அவருக்கு தெரிந்து விட்டது. அதனால் ஏற்பட்ட ஆத்திரமே அவரது அறிவுக்கு தடையாக இருக்கிறது.

இது பாதயாத்திரை அல்ல, பிஜேபியினுடைய இறுதி யாத்திரை. எப்படியும் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலுக்குப் பின்பாக வெற்றி பெற்றவர்களை தங்கள் பக்கம் இழுக்க நவீன முறைகளை பாஜக கையாண்டு வருகின்றனர். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என மூன்று திரிசூலத்தை கையில் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார்கள்.

 

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்காத மோடி தமிழகத்திற்கு சமீபத்தில் இரண்டு முறை வந்த போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்று அப்போது ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here