திருவண்ணாமலை, ஜன.28 –

திருவண்ணாமலையில் அரசியல் சார்பற்ற யாதவ மக்கள் இயக்கம் துவக்கவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே.ஆர்.பிரசாந்த் கே.வீரப்பன் பி.கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆலோசகர் ஏ.காளிங்கன் ஆலோசனைக்குழு ஆதிவெங்கடேசன் தி.இளங்கோவன் ஆடிட்டர் ஜி.முருகன் பூந்தமல்லி மணி தண்டராம்பட்டு அறவாழி நிர்வாகக்குழு கோகுலம் எம்.சுப்பிரமணி ஆடிட்டர் திருமாறன் எஸ்.செந்தில்வேலன் வி.ஏ.பொன்மணவாளன் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் மஷார் கே.மகேஷ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.தினேஷ் கே.சரவணன் என்.வெங்கடேசன் என்.தாமோதரன் வி.வெங்கடேசன் மண்டல இளைஞரணி செயலாளர் என்.ராகுல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆரணி சேகர் போளூர் ராமச்சந்திரன் பி.வாசுதேவன் ஆர்.சிவக்குமார் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  யாதவ சமுதாயத்துக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டில் உட்பிரிவில் யாதவருக்கு 20 சதவித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் தமிழகத்தில் எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைத்திட சாதிவாரி கணக்கீடு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் தமிழகத்தில் கால்நடை ஆடுமாடு வளர்கின்ற விவசாயததை நம்பி வாழ்கின்ற யாதவ சமுதாயத்திற்கு கால்நடை நலவாரியம் அமைத்து யாதவரை வாரிய தலைவராக்கிட வேண்டும் தமிழ்நாடு முழுவதும் சுழற்சி முறையில் 10 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்காத தனி தொகுதிகளை பொதுதொகுதிகளாக மாற்றிட வேண்டும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாவீரன் அழகுமுத்துகோன் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here