திருவாரூர், மே. 09 –
இங்கிலாந்து நாட்டில் உள்ள செம்ஸ்ஃபோர்டு சிட்டியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரின் மகன் வெற்றி என்பவர் வெற்றிப் பெற்றுவுள்ளார். இந்நிலையில் அவரது வெற்றியை அவர் பிறந்த கிராமத்து மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரது வெற்றியை அறிந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவரது தந்தைக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது.. பிரிட்டனை ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சி பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான பாப்பா சுப்பிரமணியன் மகன் ‘பாப்பா வெற்றி’ ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சியின் சார்பாக செம்ஸ்ஃபோர்டு சிட்டியில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.
மேலும் அவர் தற்போதைய கவுன்சிலில் “லிபெரல் டெமோகிராட்ஸ் வேட்பாளர் “சேன் பேட்ரிக் மேன்லி”யை விட 163 வாக்கு அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவ் வெற்றி என்பது வரலாற்றில் சிறப்பு வாய்ந்ததும், மேலும், முதல் முதலில் தமிழர் ஒருவர் செம்ஸ்ஃபோர்டு சிட்டி கவுன்சிலராக.. கான்சேர்வெட்டிவ் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் வெற்றிப்பெற்ற பாப்பா வெற்றி திருவாரூரில் 1982 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். மேலும் அவருக்கு அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ‘வெற்றி’ என அவருக்கு பெயர் சூட்டிவுள்ளார். மேலும், சென்னையில் ஆரம்ப பள்ளி படிப்பை முடித்து பிறகு சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி (ஜேப்பியார்)யில் B.Tech – IT படிப்பை வெற்றி முடித்துள்ளார். தொடர்ந்து 2007-ல் பிரிட்டன் சென்று, ஹெரியோட் வாட் பல்கலைகலகத்தில் Masters in Business Management பட்ட படிப்பை முடித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு சமூக சேவைகள் ஆற்றி வந்த வெற்றி அப்பகுதி மக்களிடையே பன்புடன் பழகி இப்பொழுது 80 சதவீதம் ஆங்கிலேயர், 20% இந்தியர்கள் வாழும் பகுதியில் வெற்றி பெற்றுள்ளது இந்திய மக்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது..
மேலும் பாப்பா வெற்றி, இங்கிலாந்து நாட்டில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றது, அவர் பிறந்த கிராமமான பெரும்பண்ணையூர் கிராமத்து மக்கள் பெரிதும் அவ்வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து.. பாப்பா வெற்றியின் தந்தையான பாப்பா சுப்பிரமணியன் தெரிவிக்கும் போது,
முன்னாள் முதல்வர் ‘எடப்பாடியார் உருவத்தில் எம்.ஜி.ஆர்-யை பார்க்கும் நிலையில், தான் உள்ளதாகவும் மேலும், எனது மகன் பெற்ற வெற்றிக்கு எடப்பாடியார் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியின் உச்சமாக நினைக்கிறேன் என கூறினார். மேலும் பெரும்பண்ணையூர் கிராம மக்கள் பாப்பா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..
பேட்டிகள்:
- பாப்பா. சுப்பிரமணியன், (வெற்றியின் தந்தை) அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.
மற்றும் கிராமத்தினர்.


























