உத்திரமேரூர், மே. 23 –

உத்திரமேரூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத் துவக்க விழாவில் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கிய காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை தலைமை செயலகத்தில் கானொலி காட்சி வாயிலாக தொடர்ந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருநகர், இராவத்தநல்லூர், காரணை மற்றும் கம்மாளாம்பூண்டி ஆகிய கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத் துவக்க விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்திட பணி ஆணை, தென்னங்கன்றுகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மரக்கன்றுகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைப்பதற்கான பணி ஆணை, பண்ணைக் குட்டை அமைப்பதற்காக ஆணை, அக்ரி கிளினிக் அமைக்க ஆணை ஆகியவற்றை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here