அம்பத்தூர், ஜன. 09 –

தமிழக முதல்வரின் போதையில்லா தமிழகத்தை உருவக்க தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை‌யினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அக்காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தி வருகிறார்.

அவ் உத்தரவின் படி அம்பத்தூர்‌ மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவு ஆய்வாளர்‌ தனம்மாள்‌ நடத்திய கஞ்சா வேட்டையில்‌, சுமார்‌ 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த கார்த்திக்‌ என்பவரிடமிருந்து பறிமுதல் செய்து, அக்குழுவினர் மேற்கொண்ட தீவிர விசராணையை தொடர்ந்து கார்த்திக் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்‌ தொடர்ச்சியாக செங்குன்றம்‌ மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவு ஆய்வாளர்‌ முனியசாமி நடத்திய கஞ்சா வேட்டையில்‌ சுமார்‌ 5 கிலோ கஞ்சாவை ‌கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்த முகமது அஸ்லம்‌ என்பவரிடம்‌ இருந்து கைப்பற்றினார்‌. அவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

ஆவடி காவல்‌ ஆணையரகத்தில்‌ உட்பட்ட மதுவிலக்கு அமலாக்கம்‌ பிரிவு ஆய்வாளர்கள்‌ தனம்மாள்‌ மற்றும் முனியசாமி ஆகியோரின் தலைமையில் செயல்பட்ட தனிப்படையினரை ஆவடி காவல்‌ ஆணையாளர்‌ சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here