தஞ்சை, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து கோரிக்கை மற்றும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேலும் அவர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவற்றின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விஷம் போல் ஏறி வரும் மணல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை போல கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூவேந்தர் அனைத்து கட்டட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்