திருவாரூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின் படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து அவர்களின் இரண்டாவது கட்ட தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களின் முக்கிய கோரிக்கைகள் மீது அரசாணை வழங்கப்படவில்லை பணி இறக்கம் பெற்ற மூன்று அலுவலர்கள் இதுவரை மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்த நிலையிலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நடைப்பெற்ற அக்காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் அசோக் சரவணகுமார் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள் மேலும் வட்ட தலைவர்கள் பால்ராஜ் கமலக்கண்ணன், ஆகியோர் அந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் சோமசுந்தரம், மாநில தலைவர் சௌந்தராஜன் ஆகியோர் அச்சங்கத்தின் விரிவான கோரிக்கைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். தமிழ்நாடு கூட்டுறவுதுறை ஊழியர் சங்கம் வாழ்த்துரை நிகழ்த்த காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.