ராமநாதபுரம், ஜூன்
மக்கள் நலத்திட்டங்களை கோரிக்கைளாக குரல் எழுப்பும் போது அரசு செய்யாவிடில் மக்களை திரட்டி போராடவும் தயங்க மாட்டேன் என ராமநாதபுரம் லோக்சபா எம்பி நவாஷ்கனி ஆவேசமாக கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்துவேன். குறிப்பாக காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் முறையாக பராமரிப்பின்றி உள்ளதால் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. முறையாக பராமரிக்க கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுப்பேன். குடிநீர் பிரச்னக்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்கப்படும். ராமேஸ்வரத்திலிருந்து இயங்கிய  ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க லோக்சபாவில் குரல் கொடுப்பேன். மேலும் பகல் நேர சென்னை ரயில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அமைச்சகத்தில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்துவேன். இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜ அரசு நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் வரவேற்போம். அதேநேரத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்காக குரல் கொடுத்து கோரிக்கை வைக்கும்போது அரசு செவிசாய்க்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும். உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம் அமைக்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி விமான நிலையத்தை கொண்டு வருவேன். மருத்துவ கல்லுாரி கொண்டு வருவதற்கும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் நலனுக்காக தொடர்ந்து லோக்சபாவில் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.
இவ்வாறு கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர்
உட்பட பலர் உடன் இருந்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here