திருவள்ளூர், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை சார்பில் அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்தில் பெய்த பெரும் மழையால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வல்லூர் முதல் மீஞ்சூர் வரை மிகவும் சேதமடைந்து அச்சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் குறித்த நேரத்தில் சென்றடையாத நிலை இருந்து வந்தது. மேலும் அதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கும் பெருத்த அவதிக்குள்ளானார்கள்.
அதனைக் கருத்தில் கொண்டு, ஆவடி காவல் ஆணையர் மற்றும் இணை ஆணையர், துனை ஆணையர் உள்ளிட்டவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லா பயணத்தை கனரக வாகனவோட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனும் நல்லெண்ணத்தின் பேரில், புதிய உத்தரவினைப் பிறபித்துள்ளனர்.
அதன் படி மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் இனி விரைவாக குறிப்பிட்ட நேரத்தில் பயணை எல்லையை சென்றடையும் படியும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து துறையின் மறு உத்தரவு வரும் வரை இனி அக் கனரக வாகனங்கள் சார்வீஸ் சாலையிலும் பயணிக்கும் படியான பணிகளை ஆணையர் தலைமையிலான போக்குவரத்து ஆய்வாளர் டி.சோபிராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இனிமேல் கனரக வாகனங்களும் தங்கு தடை இன்றி செல்வதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.