ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ்தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தினர். எல்லை கட்டுப்பாட்டு கோடுப்பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி செக்டாரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஜவுரி மாவட்டம் நவுசேரா செக்டாரில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. பூஞ்ச், ரஜவுரி மாவட்டங்களில் 6 செக்டார்களில் நேற்று ஒரே நாளில் 3 முறை தாக்குதல் நடத்தியது. இதில், மெந்தார் பகுதியில் ஒரு பெண் பலியானார். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதிகளில் நடத்திவரும் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்ட்டார் குண்டு தாக்குதலில் இந்திய எல்லையோர கிராம மக்கள் காயம் அடைந்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகட்டி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். இதேபோல், மெந்தார், பாலகோட் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய வீரர்களும் பதிலடி தந்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here