சென்னை, செப் . 15 –

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனை மடுவு நீர் தேக்கத்தில் இருந்து அணை கால்வாய் பாசனப் பகுதிகளிலும், ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும், குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், நிலத்தடிநீர்மட்டம் உயர்வதற்கும், ஆற்றுப் பாசனபகுதிகளுக்கு இன்று முதல் 12 நாட்களுக்கு 62.16 மில்லியன் கன அடியும், செப் 27 முதல் 9 நாட்களுக்கு வலதுபுறக் கால்வாய் பகுதி மற்றும் இடது புறக் கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு சிறப்பு நனைப்பாக 38. 88 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் புழுதிக்குட்டை குறிஞ்சி, சின்னம்மநாயக்கன் பாளையம், கோலாத்து கோம்பை, நீர் முள்ளிக் குட்டை மற்றும் சந்திரப்பிள்ளை வலசு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதிப்பெறும். என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here