கும்பகோணம், ஏப். 24 –
கும்பகோணத்தில் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் இலவச இருதய சிகிச்சை மற்றும் குடல் வயிறு சர்க்கரை நுரையீரல் மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்ற, இந்த முகாமை சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் காமகோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யம் செந்தில் செயலாளர் கணேஷ் பொருளாளர் ரவிச்சந்திரன் துணைத் தலைவர் பி எஸ் சேகர் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பாலாஜி முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் செந்தில் வாசு மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இம்முகாமில் மருத்துவர்கள் ராஜன் லட்சுமணன்தாஸ் ஆகியோருக்கு சிறந்த மருத்துவர் என்ற விருதை ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யம் செந்தில் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள் தொடர்ந்து ரோட்டரி சங்க தலைவர் தெரிவித்தபோது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், குறைவான உணவு உட்கொள்ளல், அதிகபடியாக வியர்த்தல், நினைவு இழத்தல், பெரியவர்களுக்கான இருதய பிரச்னைகளுக்கு ஆலோசனை பெற்றனர். முகாமில் பங்கேற்றோருக்கு பி.எம்.ஐ., சோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., எக்கோ கார்டியோகிராம், டி.எம்.டி., பரிசோதனைகள் செய்யப்பட்டது. 2 நாள் நடைபெற்ற முகாமில், 700க்கும் மேற்பட்ட மருத்துவப் பயனாளிகள் பங்கேற்றனர். இதில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சைக்காக 35 பேர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த அறுவை சிகிச்சை ஒரு நபருக்கு அதிகபட்சமாக 3 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தார்.






















