செங்கல்பட்டு, மே. 12 –

செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் பகுதியில் வசித்து வருபவர் கட்டட கட்டுமான தொழிலாளியான வினோத்குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத்குமார் அடிக்கடி யாரிடமாவது மது வாங்கித் தரச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதுப்போன்று, நேற்று இரு தினங்களுக்கு முன்பு, இராட்டிணங்கிணறு மதுபானக்கடை அருகே வினோத்குமார் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), தங்கராஜ் (37), ஷான் (40) மற்றும் திருமணியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (48) ஆகியோரிடம் மது வாங்கி தருமாறு கேட்டுத் தொல்லை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் அருகில் இருந்த கட்டையை எடுத்து வினோத்குமாரின் தலையில் அடித்துள்ளனர். அதில் வினோத் குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நால்வரும் வினோத்மாரை தூக்கிச் சென்று மது போதையில் கீழே விழுந்து கடந்ததாக கூறி அவரது வீட்டில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை 11-மணி வரை எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த அவரது மனைவி வினோத்குமாரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளார். அங்கு வினோத்குமாருக்கு தருத்துவர் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார் வினோத்குமாரின் நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மது வாங்கித் தரம்படி கேட்டு தொந்தரவு செய்தவரை அவரின் நண்பர்களே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here