நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி பகுதியை சேர்ந்த வேணுகோபால் அமராவதி ஆகியோரின் மகன் சக்திவேல். விவசாயி இருசக்கர வாகனத்தில் விவசாய வேலைகளுக்காக டீசல் வாங்குவதற்கு திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்புறமாக மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் முன்னே சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது பயங்கர சத்தத்தை எழுப்பி மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். அதில் 100 மீட்டர் தூரத்திற்கு சக்திவேலை இழுத்துச் சென்றதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார்.
இந்நிகழ்வை பார்த்த ஊர் பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக சக்திவேல் உடலை அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்திவுள்ளது. மேலும் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது என்றும், சம்பந்தப்பட்ட துறையும், காவல்துறையும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த விவசாயியான சக்திவேலுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் அவருக்கு பட்டதாரி மனைவி.. மற்றும் 2 சகோதரர்கள் மற்றும் 1 சகோதரி உள்ளனர். இந்நிலையில் ஒட்டு மொத்த குடும்பத்தின் வாழ்வாதரத்தை கவனித்து வந்த அவரின் இழப்பு பெரும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.




















