திருவையாறு, ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

தஞ்சாவூர் மாவட்டம், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் திருவையாறு அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த சடலத்தை தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்டம், கீழ புனவாசல் வல்ல வெட்டி தெருவில் வசித்து வந்தவர் முனிசாமி மேலும் அவர் நேற்று 25 ஆம் தேதி காலை 7 மணிக்கு தனக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றினை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று உள்ளார்.

இந்நிலையில் மேய்சலுக்கு சென்றவர் இரவு வரை வெகு நேரமாகியும் முனியசாமி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் முனியசாமி வழக்கமாக மாடுகளை அழைத்து செல்லும் இடங்களுக்கு சென்று தேடி பார்த்துள்ளனர். அப்போது வயல் வெளியில் முனியசாமி மல்லாந்த நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்துவுள்ளார்.

மேலும் மேய்ச்சலுக்காக தன்னோடு அழைத்து சென்ற மாடு மற்றும் கன்று முனியசாமி உடல் அருகிலேயே நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அத்தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த மருவூர் காவல் நிலைய போலிசார் முனியசாமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த தனது தந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முனிசாமி மகன் ராஜ்கண்ணு அளித்த புகாரின் பேரில் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த ராஜ்கண்ணுவின் தந்தை முனிசாமியின் உடலை சோதனை செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here