திருவாரூர், மார்ச். 24 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் பகுதியில் முதன்முதலாக நாளை முதல் புத்தக கண்காட்சி துவங்கயிருப்பதாகவும் மேலும் அக்கண்காட்சி நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை நடைப்பெறயிருப்பதாக திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் போது இப்புத்தக கண்காட்சியை புத்தக வாசிப்பாளர்களான பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களென அனைவரும் இக்கண்காட்சிக்கு வருகைதந்து இவ்வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், திருவாரூர் நகரில் முதன் முதலாக நடைப்பெறும் இப்புத்தக கண்காட்சி மார்ச் 25 ஆம் தேதியான நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த இப்புத்தக கண்காட்சி நம் நகரிலும் முதன்முலாக நடைப்பெற தமிழ்நாடு அரசின் முயற்சியாலும், மாவட்ட நிர்வாகத்தின் ஊக்கத்தாலும் நடைபெற உள்ளதென அப்போது மேலும் தெரிவித்தார்.
முன்னதாக இப்புத்தக கண்காட்சிக்கான விளம்பர மற்றும் அறிவிப்பு பேனர்களை திருவாரூர் நகரின் முக்கிய இடங்களில் மக்களின் பார்வைக்கு வைத்திட அவர் நகராட்சி ஊழியர்களிடம் அப்பேனர்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்வின் போது, மன்ற வார்டு உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர் முத்துக்குமார் பொறியாளர் ஐயப்பன் துப்புரவு ஆய்வாளர் தங்க ராமு மற்றும் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.