கும்பகோணம், அக். 19 –

கும்பகோணம் அருகே  உள்ள திருவைகாவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் கொடிக்கம்பம் வைத்துள்ளனர். இந்த கொடி கம்பத்தை மற்றொரு சமூகத்தினர் அகற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற கூறுவதை கண்டித்தும், கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்தும், திருவைகாவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை, உள்ளிட்ட கிராம மக்கள் திருவைகாவூர் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து நேற்று முன் தினம் இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினர் .இரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், இளைஞர்களிடம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர்  மதுசூதனன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து அதுவரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க சாலைமறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது .

அதனைத் தொடர்ந்து நேற்று வட்டாட்சியர் மதுசூதனன் தலைமையில் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பினருக்கு இடையே எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் கலைந்து சென்றனர் .இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவைகாவூர் மண்ணியாற்று பாலத்தில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மற்றொரு சமூகத்தினர் அவர்களும் திருவைகாவூர் மண்ணியாற்று பாலத்திற்கு வருகை தந்து தகாத வார்த்தைகளால் திட்டியதில் இரண்டு தரப்புக்கும் இடையே அடிதடி சண்டையாக மாறியது கல் மற்றும் கம்பால் அடித்து கொண்டதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெலட்டூர் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் சுகுணா வயது 37 என்பவருக்கும், கபிஸ்தலம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் வயது 55, என்பவர்க்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இரு கோஸ்டி சண்டையில் இரண்டு தரப்பையும் சேர்ந்த திருவைகாவூர் அண்ணா நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜயராகவன் வயது 16, கலியமூர்த்தி மனைவி தமயந்தி வயது 55, தேவேந்திரன் மகன் தியாகராஜன் வயது 27, அன்பரசன் மனைவி அனுசுயா வயது 36, கௌதமன் மகன் திவாகர் வயது 22, குணசேகரன் மனைவி மாலதி வயது 32, திருவைகாவூர் தெற்கு தெருவை சேர்ந்த சுயம்பிரகாசம் மகன் நடராஜன் வயது 36, திருவைகாவூர் மெயின் ரோட்டை சேர்ந்த துரைராஜ் மகன் கருணாமூர்த்தி வயது 42,ஆகிய எட்டு பேர்கள் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஆயூதப்படை, அதிரடி படை காவல் துறையினர் குவிக்கப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here