தாம்பரம், செப் . 24 –

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிர் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைப் பெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த செப். 15 தேதி தொடங்கி செப் 22 அன்று முடிவுற்றது. இந்நிலையில் 12 வார்டுகளை உள்ளடக்கிய முடிச்சூர் ஊராட்சியில் உள்ள 8 வது வார்டுக்கு ஜெய் சிவசேனா சார்பில் எஸ். குப்பு என்ற பெண் வேட்பாளர் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவரிடம் செப் 22 அன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று தாக்கல் செய்தார். நேற்று நடைப்பெற்ற வேட்பு மனு சரிபார்ப்பில் அவரது வேட்பு மனு ஏற்கப் பட்டுள்ளது. செப் 25 நாளை இவருக்கு ஒதுக்கப் படும் சின்னம் எதுவென்று தெரிய வரும்.

 

ஜெய்சிவசேனா சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் எஸ். குப்பு வேட்பு மனு தாக்கல் செய்யும் போது உடன் ஜெய் சிவசேனா தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி கி.ராமசுப்பிரமணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் K. தெய்வசிகாமணி, பாரதிய மகளிர் சேனா பிரிவு S. சராள சுதாகர் உடன் இருந்தனர்.

 

முடிச்சூர் ஊராட்சிக்குள் அடங்கிய 12 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 72 பேர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. கடுமையான போட்டி நிலவும் இந்த ஊராட்சியில் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் எஸ். குப்பு கூறும் போது இந்த ஊராட்சியில் பல்வேறு மக்கள் நலன் செயல்பாட்டு குறைபாடுகள் உள்ளது.

1)
குறிப்பாக நில சீரமைப்பு முறையில் குடியிருப்பு நிலமாக மாற்றம் பெற்ற போதிலும், இப்பகுதி குடியிருப்பு வாசிகளின் குடியிருப்புக்கு பட்டா வழங்குவதில் வேகத் தடை உள்ளது அதனை ஊராட்சி மன்ற கூட்டத்தில் பேசி அதற்கான அதிவேக நடவடிக்கையை ஊராட்சி மன்றத்தில் முதன்மைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் பட்டாக் கிடைக்க வழி செய்வேன்.
2)
சுகாதார சீர்கேடுளால் விளையும் நோய் தன்மைகளைக் கருத்தில் கொண்டும், அதற்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணிகளை முழுமையாக முன்னெடுத்து தூய்மை பகுதியாக இப்பகுதி இருக்க நடவடிக்கைகளை மேற் கொள்வேன்.
3)
வீதி சாலைகள் பரமரிப்பு மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கவும், அதன் மூலம் இப்பகுதிகளில் சிறு குறு தொழில்கள் வர வழி வகுக்கும் முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வேன். அதனால் இப்குதிகளில் படித்த மற்றும் மகளிர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க உறுதுணையாக இருப்பேன்.
4)
மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் வாகன விபத்து, மற்றும் ஊர்வன போன்ற விஷ பூச்சிகளின் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தடுத்திடவும், திருடர்கள் இப்பகுதிகளில் நுழைந்திடா வகையில் வீதி விளக்குகளை பராமரிப்பு மற்றும் தேவையான இடங்களில் மேலும் புதி மின் கம்பங்களை அமைக்க வேண்டிய நடவடிக்கைகளையும், புதிய மின்மாற்றிகளை அமைத்து மின்னழுத்தம் ஏற்ற இறக்கம் இன்றி சீரான மின்சாரம் கிடைத்திட நடவடிக்கைகளை மேற் கொள்வேன்.
5)
சுகாதாரமான குடிநீர் தடையின்றி கிடைக்க வீதிகளில் தண்ணீர் தொட்டிகளை அமைத்தும் வாகனத்தின் மூலமாகவும், மேலும் வாய்ப்புள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
6)
மேலும், சிறுவர்கள் பொழுதுப்போக்கு பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், நூலகங்கள், சமூக கூடங்கள் மற்றும் தனித்திறன் கொண்ட சிறுவர்களையும், இளைஞர்களையும் இனம் கண்டு அவர்களை விளையாட்டு மற்றும் கல்வி போன்றவற்றில் இப்பகுதி சிறுவர்களும், இளைஞர் இளைஞிகளுக்கும் அவர்கள் அத்துறையில் மேம்படுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற் கொள்வேன்.
என இவ்வாறு பலவிதமான திட்டப்பணிகள் குறித்த வாக்குறுதிகளை மக்களிடம் முன்னெடுத்து சென்று வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்று இப்பகுதியை முன் மாதிரியாக ஆக்குவேன் என நம்பிக்கையை தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here