மதுக்கூர், ஜூன். 08

மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு விக்ரமம் மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள்  மூலம் விவசாயிகளின் தேவைகளாள விவசாய கடன் அட்டை பெறுதல் மற்றும் pm-kisan பதிவு செய்த விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு கிராம நிர்வாக அலுவலர்களின் மூலம் பட்டா மாறுதல் செய்வதற்கான முகாம் மற்றும் குருவை பருவத்துக்கு தேவையான ஏஎஸ்டி 16 விதைகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

மதுக்கூர் வடக்கு கிராமத்தில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கார்த்தி மற்றும் தினேஷ் பிஎம் கிசான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் சேர்ப்பு மற்றும் விவசாய கடன் அட்டைகள் பற்றியும், நெல்லுக்கு விதை நேர்த்தி செய்வது பற்றியும், விளக்கிக் கூறினார் உடன் அட்மா திட்ட அலுவலர் ராஜு.

விவசாயிகளிடமிருந்து தேவையான ஆவணங்கள் சரி பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பெறப்பட்டது. அத்திவெட்டி கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சினை ஊசி போடுதல் தாது உப்பு கலவை வழங்குதல் மற்றும் நோயறிதல் பற்றி முகாம் நடைபெற்றது.

அத்திவெட்டி கிராமத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

அத்திவெட்டி கால்நடை முகாமில் கால்நடை மருத்துவர் லாவண்யா கலந்துகொண்டு தேவையான முதலுதவி  பணிகளை மேற்கொண்டார். அனைத்து பஞ்சாயத்து வெளியிலும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறையின் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் விக்ரமம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

கலைஞர் திட்ட கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட விக்ரமம் கிராமத்தில் குமுளை வடிகால் வாய்க்கால் தூர்வாரி அகலப்படுத்தும் பணி போர்கால அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது நீர் வரத்து துவங்கியுள்ளது ஒருங்கிணைப்பு அலுவலர் பூமிநாதன் அவர்களால் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கான இன்றைய கூட்டத்தினை வேளாண் உதவி அலுவலர்கள் கார்த்தி தினேஷ் பூமிநாதன் ஜெரால்டு முருகேஷ் தினேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக செயல்பட்டு விவசாயிகளின் தேவைகளை பதிவு செய்தனர். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இனி நடைபெற உள்ள இக் கூட்டங்களில் விடுபட்ட விவசாயிகளும் கலந்துகொண்டு தங்கள் தேவைகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ள உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here