தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் கென்யாவைச் சேர்ந்த இரண்டு பேர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தய  போட்டியில் கலந்து கொண்டனர்.

 

இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயமானது தேனி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி அன்னஞ்சி விலக்கு பெரியகுளம் சாலை தேனி பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வந்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் வரையில் மொத்தம் 12.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இந்தப் போட்டியானது 18 வயது முதல் 30 வயது வரை ஒரு பிரிவாகவும், முப்பத்தி ஒரு வயது முதல் 50 வயது வரை மற்றொரு பிரிவாகவும் இரண்டு பிரிவாகவும் நடத்தப்பட்டது. போட்டியின் முடிவில் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள பிரிவில் முதலாவது பரிசினை திருப்பூரைச் சேர்ந்த சூர்யாவும்,இரண்டாவது பரிசினை வினோத்குமார் என்பவரும், மூன்றாவது பரிசை ராம்குமார் என்பவரும்  பெற்றுச் சென்றனர். அதேபோல முப்பத்தி ஒரு வயது முதல் 50 வயது வரை உள்ள பிரிவில் ஜெகதீசன் முனுசாமி என்பவர் முதல் பரிசையும், கென்யாவைச் சேர்ந்த பீட்டர் மியாங்கி இரண்டாம் பரிசினையும், ஆசாத் என்ற பெண்மணி மூன்றாவது பரிசையும் பெற்று சென்றனர்.

 

இந்த போட்டியில் முதலாவது பரிசாக  ரூ.9000 மற்றும் சான்றிதழ், இரண்டாவது பரிசாக 6000 மற்றும் சான்றிதழ் ரூபாய் மூன்றாம் பரிசாக 3000 மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. பரிசுகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here