எல்லாபுரம், மே. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி…

தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினரின் சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறந்து வைத்தனர்.

எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை கும்மிடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொது மக்களுக்கு குளிர்ச்சியான பொருட்களை வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில்  எல்லாபுரம் ஒன்றியத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே. மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் தண்டலம் பாலவாக்கம் பகுதிகளிலும் பூண்டி கிழக்கு ஒன்றித்தில் கச்சூர் கிராமத்தில் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையிலும் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி தலைமையில் சீத்தஞ்சேரி பகுதியில்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் திமுக இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் குளிர்ச்சியான நீர், மோர், தர்பூசனி , கிரினி பழம் நுங்கு மற்றும் குளிர்பானங்கள் என குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

திருவள்ளூர்  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.பி.ரவிகுமார் பொதுக் குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்திஎல்லாபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.ராஜா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தொம்பரமேடு சங்கர் பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் கோல்டு மணி என்கிற மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், ஒன்றிய துணைச் செயலாளர் சித்ரா பாபு, மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசலு, ரகு, பூண்டி ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் சீனிவாசன் ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன்,கச்சூர் ரஞ்சித் குமார், மற்றும்  மாவட்ட ஒன்றிய பேரூர்  நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும்  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here